செய்திகள் உலகம்
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
டொராண்டோ:
கனடாவின் டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் 'சல்சா ஆன் செயின்ட் கிளேர்' தெருத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
22-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த திருவிழாவின் முதல் நாளில், குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இசையையும் நடனத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி முழங்கும் சத்தம் கேட்டது.
இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொருவருமாக மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஆறு பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
