செய்திகள் உலகம்
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
தெஹ்ரான்:
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
வட்டாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஒழியும் வரை நீரிணையை மூடவிருப்பதாக அது அறிவித்துள்ளது.
நீரிணையை அனுமதியின்றி ஒரு கப்பல் கடந்ததாவும் அது பல முறை எச்சரிக்கையைப் புறக்கணித்ததால் கப்பலைத் தாக்கியதாகவும் ஈரானிய புரட்சிப் படை சொன்னது.
தன் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்தது.
அமெரிக்கா அதைப் பொருட்படுத்தவில்லை. ஈரான் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
ஈரான் இனி அவ்வாறு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க அமெரிக்கா கடுமையான பதிலடியைக் கொடுக்கும் என்று அமெரிக்கா கூறியது.
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுகிறது என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவின் தன்மூப்பான நடவடிக்கையினால் அங்கு முன்பு போல் கப்பல் போக்குவரத்து தடைபடும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
