செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்; வேட்பாளர் பட்டியலை தேசிய முன்னணி இந்த வாரம் அறிவிக்கும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இந்த வாரம் தேசிய முன்னணி அறிவிக்கும்.
மாநிலத்தின் இடங்களின் எண்ணிக்கை, மக்கள்தொகை புள்ளி விவரங்கள், வாக்காளர்கள் ஆகியவற்றில் தனக்கே உரிய தனித்தன்மைகள் இருப்பதால், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
நெகிரி செம்பிலானில் உள்ளூர் அரசியல் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால், அங்குள்ள தேசிய முன்னணி உத்தியை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது.
இது வெறும் ஒரு வேட்பாளரை மட்டும் சார்ந்ததல்ல. ஆனால் நெகிரி செம்பிலானின் சூழல் நிச்சயமாக வேறுபட்டது.
இடங்களின் எண்ணிக்கையும், மக்கள்தொகையும், வாக்களிப்புப் புள்ளிவிவரங்களும் வேறுபட்டவை.
எனவே, இந்த சூத்திரத்தை நெகிரி செம்பிலானின் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.
இந்த வாரம் நாங்கள் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:32 pm
உணவகத்தில் குடுமிப்பிடி சண்டை: இரு இளம்பெண்கள் கைது
July 13, 2026, 5:28 pm
நெகிரி செம்பிலான் தேர்தல்: DAP மூன்று புதிய முகங்களை களமிறக்கவுள்ளது
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
