செய்திகள் மலேசியா
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மலேசியாவிற்கு வருகை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மரியாதை நிமித்தம் சந்திப்பு
புத்ராஜெயா-
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் மலேசியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்
ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை அதிபர் தர்மன் அவர்கள் மலேசியாவில் இருப்பார் என்று இதற்கு முன் விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மலேசியாவில் இருக்கும் அவரைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
அவர்களின் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பில் முதலீடு, வர்த்தகம், தொழிற்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான், தொழில்முனைவோர், கூட்டுறவு துறை மேம்மாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மலேசியாவிற்கு வருகை தந்த அதிபர் தர்மனை, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அவர்கள் இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:32 pm
உணவகத்தில் குடுமிப்பிடி சண்டை: இரு இளம்பெண்கள் கைது
July 13, 2026, 5:28 pm
நெகிரி செம்பிலான் தேர்தல்: DAP மூன்று புதிய முகங்களை களமிறக்கவுள்ளது
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
