செய்திகள் மலேசியா
ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெருந்திட்ட வரைவு விரைவில் இறுதி செய்யப்படும்: பிரதமர்
புத்ராஜெயா:
ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெருந்திட்ட வரைவு விரைவில் இறுதி செய்யப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மலேசியா, சிங்கப்பூர் இடையே வர்த்தகம், முதலீடு, பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பெருந்திட்ட வரைவு விரைவில் இறுதி செய்யப்படும்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு நாடுகளும் வரவேற்றுள்ளதாகக் கூறிய அவர், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்துடனான தனது சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.
நிலுவையில் உள்ள பல விஷயங்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததோடு, மலேசியா-சிங்கப்பூர் உறவுகள், பிராந்திய நிகழ்வுகள், பொதுவான நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:32 pm
உணவகத்தில் குடுமிப்பிடி சண்டை: இரு இளம்பெண்கள் கைது
July 13, 2026, 5:28 pm
நெகிரி செம்பிலான் தேர்தல்: DAP மூன்று புதிய முகங்களை களமிறக்கவுள்ளது
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
