செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் தேசிய முன்னணி வெற்றியைப் பதிவு செய்யலாம்: சாலே சைட் கெருவாக் நம்பிக்கை
பெட்டாலிங் ஜெயா-
ஜொகூர் மாநிலத்தில் வென்றத்தைப் போலவே நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் தேசிய முன்னணி வெற்றியை பதிவு செய்யலாம் என்று சபா மாநில முன்னாள் முதலமைச்சர் டத்தோஶ்ரீ சாலே சைட் கெருவாக் நம்பிக்கை தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் அரசியல் என்பதை மாறுபட்டதாகும். அம்மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி பிரதான அரசியல் கட்சியாக விளங்குகிறது.
"உள்ளூர் பிரச்சினைகள், வாக்காளர் மனநிலை மற்றும் மந்திரி பெசார் வேட்பாளரின் தேர்வு ஆகியவையும் தேர்தல் முடிவைப் பாதிக்கும்" என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
வெற்றிப் பெறுவதற்கான வியூகத்தைத் தேசிய முன்னணி தீவிரமாக செயல்படுத்த வேண்டும். சட்டமன்றத்தில் எவ்வளவு இடங்களை வெல்கிறோம் என்பதே இங்கு முக்கியம் என்று அவர் சொன்னார்.
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 48 இடங்களை வென்று அபார வெற்றிப்பெற்றது. நம்பிக்கை கூட்டணி வெறும் 8 இடங்களை மட்டுமே வென்றது.
நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் உள்ள மொத்தம் 36 சட்டமன்ற இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:32 pm
உணவகத்தில் குடுமிப்பிடி சண்டை: இரு இளம்பெண்கள் கைது
July 13, 2026, 5:28 pm
நெகிரி செம்பிலான் தேர்தல்: DAP மூன்று புதிய முகங்களை களமிறக்கவுள்ளது
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
