செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தல்: DAP மூன்று புதிய முகங்களை களமிறக்கவுள்ளது
சிரம்பான் -
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் DAP மூன்று புதிய முகங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த முறை DAP கட்சி 11 இடங்களில் போட்டியிடும் நிலையில் மூன்று இடங்களுக்குப் புதியவர்களைக் கறமிறக்குகிறது.
எஞ்சிய எட்டு இடங்களில் ஏற்கனவே வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மம்பாவ் தொகுதியில் லீ காய் யெட், சிரம்பான் ஜெயா தொகுதியில் எஸ்.முகுந்தன் மற்றும் தெமியாங் தொகுதியில் ஹொ வெங் வாஹ் ஆகிய புதிய வேட்பாளர்கள் இங்கு போட்டியிடவுள்ளனர்.
எஞ்சிய எட்டு சட்டமன்ற தொகுதியானது தற்போது இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களே தக்கவைத்து கொள்ள போட்டியிடுவார்கள் என்று DAP கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
நீலாயில் அருள்குமார் ஜம்புலிங்கம், மற்றும் ரெப்பா சட்டமன்ற தொகுதியில் வீரப்பன் ஆகிய இருவரும் மீண்டும் தேர்தலில் களம் காண்கின்றனர்.
கடந்த 2023 நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தனர்.
நம்பிக்கை கூட்டணி 17 இடங்களையும் தேசிய முன்னணி 14 இடங்களையும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 5 இடங்களையும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:32 pm
உணவகத்தில் குடுமிப்பிடி சண்டை: இரு இளம்பெண்கள் கைது
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
