நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் தேர்தலில் தேசிய முன்னணி எளிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது: தேர்தல் ஆணையம்

ஜொகூர்பாரு:

16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் எளிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தேசிய முன்னணி மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் இதனை கூறினார்.

நேற்று இரவு 10.32 மணி நிலவரப்படி தேசிய முன்னணி 29 மாநில சட்டமன்ற  இடங்களை வென்று எளிய பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளது.

அடுத்த தேர்தல் முடிவுகள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.

எது எப்படி இருந்தாலும் தேசிய முன்னணி மீண்டும் ஜொகூர் மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது.

இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பிரதான செயல்பாட்டு அறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக இந்த தேர்தலில் தேசிய முன்னணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நம்பிக்கை கூட்டணி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மற்ற கட்சிகள் அனைத்தும் ஒரு இடத்தை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset