நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பு விகிதம் அதிகரிப்பு 

ஜொகூர் பாரு- 

2026 ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பு விகிதம் கடந்த 2022ஆம் ஆண்டை காட்டிலும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இந்த தகவலை மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது 

கடந்த 2022 ஜொகூர் மாநில தேர்தலில் மொத்தமாக 54.9 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மதியம் மூன்று மணி வரை 56.77 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது 

அனைத்து 56 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு மையங்கள் மாலை 6 மணியுடன் மூடப்படும் 

முன்னதாக, ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பு விகிதம் 70 விழுக்காடு வரை பதிவாகும் என்று நேற்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது 

2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 56 தொகுதிகளில் 40 தொகுதிகளை வெற்றிக்கொண்டு ஜொகூர் மாநில அரசாங்கத்தை அமைத்தது 

தேசிய முன்னணி 40 இடங்களையும் நம்பிக்கை கூட்டணி 12 இடங்களும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 3 இடங்களையும் மூடா கட்சி ஓர் இடத்தையும் வெற்றிக்கொண்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset