நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; 45க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது: ஜாஹித்

ஜொகூர்பாரு:

16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி தேசிய முன்னணி 45க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது.

தேசிய முன்னணி டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்துள்ளார்.

2022 மாநிலத் தேர்தலில் கூட்டணி பெற்ற முந்தைய வெற்றியை விட இந்த முடிவு சிறந்தது.

தற்காலிக ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தலைமையிலான இந்த வெற்றி, அவரது நிர்வாகத்தின் திறமையான சேவையைப் பிரதிபலிக்கிறது.

இந்த வலுவான மக்கள் ஆணை, வரவிருக்கும் நெகிரி செம்பிலான், மலாக்காவில் நடைபெறும் மாநிலத் தேர்தல்களுக்கும், இறுதியில் பொதுத் தேர்தலுக்கும் முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் ஒரு அலையாக அமையட்டும் என்று ஜாஹித்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset