நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் 4 தொகுதிகளையும் வென்று மஇகா புதிய வரலாறு

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைத்துள்ளது.

16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி 45க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இத்தேர்தலில் மஇகா போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கெமெலேவில் போட்டியிட்ட ஜொகூர் மாநில மஇகா தொடர்பு குழு தலைவரான ரவீன்குமார் மகத்தான வெற்றியை பெற்றார்.

அதே போன்று  புக்கிட் பத்துவில் குமரனும் கஹாங்கில் ருகேந்திரனும் வெற்றி பெற்றனர்.

மேலும் பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் பன்னீர் செல்வத்தின் வெற்றி மஇகாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பல தவணைகள் எதிர்க்கட்சிகள் வசம் இருந்த இத்தொகுதியில் முதல் முறையாக களமிறங்க மஇகா வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலான மஇகாவின் இந்த வெற்றி அக்கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset