நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு ஜோகூர் மக்களுக்கு நன்றி:  ஒன் ஹஃபிஸ் காஸி 

ஜோகூர் பாரு: 

மாநிலத் தேர்தலில் பெருவாரியான இடங்களில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதை அடுத்து, ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஒன் ஹஃபிஸ் காசி ஜோகூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் அம்னோ தலைவராகவும் இருக்கும் ஒன் ஹஃபிஸ், போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களைப் பெற்று பி.என். அடைந்த வெற்றி, மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய கட்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறினார்.

மேலும், கட்சியின் தலைமை, மற்ற தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

"புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே, 'பங்சா ஜோகூர்' (ஜோகூர் தேசம்) நோக்கி உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு காத்திருக்கிறது," என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். இந்த சந்திப்பில்தேசியத் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வாஜ்தி துசுகி ஆகியோரும் உடனிருந்தனர்.

"நாம் எப்போதும் கனவு கண்ட ஜோஹோரை" கட்டியெழுப்ப, ஜோஹோர் மக்கள் ஒன்றுபட்டு ஒன்றிணைய வேண்டும் என்று ஒன் ஹபீஸ் வலியுறுத்தினார். அவர், "நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றாக முன்னேறுவோம்" என்றார்.

மாநில அரசை அமைக்க 29 இடங்கள் கொண்ட எளிய பெரும்பான்மை தேவைப்படுகிறது, அதே சமயம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 39 இடங்கள் தேவை. தேசிய முன்னணி அனைத்து 56 இடங்களிலும் போட்டியிட்டது.

2022 தேர்தலில், தேசிய முன்னணி  40 இடங்களையும், பக்கத்தான் ஹரப்பான் 12 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் 3 இடங்களையும், மூடா 1 இடத்தையும் வென்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset