செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில இந்தியர்களின் நலனை தேசிய முன்னணியும் மஇகாவும் தொடர்ந்து பாதுகாக்கும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
பெர்லிங்:
ஜொகூர் மாநில இந்தியர்களின் நலனை தேசிய முன்னணியும் மஇகாவும் தொடர்ந்து பாதுகாக்கும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை உறுதியாக கூறினார்.
ஜொகூர் மாநில தேர்தலில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மஇகா நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் மஇகா வெற்றி பெறும். குறிப்பாக தேசிய முன்னணி மீண்டும் ஜொகூர் மாநிலத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
காரணம் ஜொகூர் மாநில இந்தியர்களின் நலனை தேசிய முன்னணியும் மஇகாவும் தொடர்ந்து பாதுகாக்கும்.
ஆக ஜொகூர் மாநில இந்தியர்கள் முழுமையாக தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இதனிடையே பெர்லிங் சட்டமன்றத் தொகுதி மஇகா கிளை, தொகுதி தலைவர்களுடன் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பில் பெர்லிங் தொகுதி வேட்பாளர் பன்னீர் செல்வத்தின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து விவாதிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
