நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசியக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் முழுமையாக ஆதரவளிக்க வேண்டும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இத்தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.

ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆளும் கட்சியாக இருப்பதால் வரும் தேர்தலில் அக்கூட்டணி வெற்றி பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய முன்னணியும்  நம்பிக்கை கூட்டணியும் இணைந்து தான் மத்தியில் ஆட்சி புரிந்து வருகின்றன.

அக்கூட்டணிகளின் ஆட்சி எப்படி உள்ளது என மக்களுக்கு தெரியும்.  ஆகையால் ஜொகூர் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு சரியான தேர்வு தேசியக் கூட்டணி தான். ஆகவே ஜொகூர் மக்கள் தேசியக் கூட்டணிக்கு முழுமையாக வாக்களிக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset