நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெமெலே சட்டமன்றத் தொகுதி எனக்கு புதிய இடம் அல்ல; மஇகா, தேசிய முன்னணி சேவைகளை தொகுதி மக்கள் அங்கீகரிப்பார்கள்: ரவீன்குமார்

ஜொகூர்பாரு:

கெமெலே சட்டமன்றத் தொகுதியில் மஇகா, தேசிய முன்னணி சேவைகளை தொகுதி மக்கள் முழுமையாக அங்கீகரிப்பார்கள்.

கெமெலே சட்டமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் ரவீன்குமார் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று நடைபெற்றது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

அதே வேளையில் வரும் சனிக்கிழமை அனைத்து வாக்காளர்களும்  திரளாக வந்து வாக்களிக்க வேண்டும்.

இந்நிலையில் முதல் முறையாக கெமெலே சட்டமன்றத் தொகுதியில் நான் முதன் முறையாக போட்டியிடுகிறேன். இருந்தாலும் இத்தொகுதி எனக்கு புதியது அல்ல.

சிறு வயது முதல் இத்தொகுதியில் நான் இருக்கிறேன். அதே வேளையில் அரசியலுக்கு வந்த பின் இத்தொகுதி மக்களுக்காக சேவையாற்றி உள்ளேன்.

மேலும் இதற்கு முன் மஇகாவைச் சேர்ந்தவர் தான் இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரும் சிறந்த சேவையை வழங்கியுள்ளார்.

இதன் அடிப்படையில் மஇகா, தேசிய முன்னணி சேவைகளை இத்தொகுதி மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளதாக ரவீன்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset