செய்திகள் மலேசியா
ஜொகூர், சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் புத்ராஜெயாவின் முன்னெடுப்பாகும்- தெங்கு ஸப்ருல்
பெட்டாலிங் ஜெயா-
JS-SEZ அல்லது ஜொகூர், சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம் என்பது புத்ராஜெயாவின் முன்னெடுப்பாகும்.
எனவே, இந்த திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் கூறினார்.
கூட்டரசு அரசாங்கத்தின் முதன்மையான திட்டமாக இந்த ஜொகூர், சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார திட்டம் உள்ளதாக பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகருமான அவர் ஒரு காணொலி வாயிலாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தை மேற்கொள்ள சிங்கப்பூர் அரசிடமிருந்து மலேசியாவிற்கு இணக்கம் பெறப்பட்டதாகவும் இதனால் அதிகமான முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று அவர் சொன்னார்.
ஜொகூர் மாநில அரசாங்கத்தின் பங்களிப்பும் இதில் அவசியமாகிறது. இருந்தும் மத்திய அரசாங்கத்தின் நோக்கங்களையும் சேவைகளையும் புறக்கணிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, ஜொகூர், சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார திட்டம் அமலாக்கம் தொடர்ந்து மத்திய அரசால் ஒத்திவைக்கப்படுவதாக ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
JS-SEZ திட்டத்தைப் பயன்படுத்தின் ஓன் ஹாஃபிஸ் காஸி அரசியல் பரப்புரை மேற்கொள்வதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் பதிலடி கொடுத்திருந்தார்
-மவித்திரன்
