செய்திகள் மலேசியா
தமிழகம் உட்பட இந்தியாவுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படும்: அந்தோனி லோக்
சிரம்பான்:
தமிழகம் உட்பட இந்தியாவுக்கான விமான சேவைகள் இன்னும் அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
பல கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருகின்றனர்.
அதே போன்று மலேசியாவில் இருந்தும் அதிமான மக்கள் இந்தியாவுக்கும் செல்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அதிகமான மலேசியர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் அதிகமான விமான போக்குவரத்து தற்போது இல்லை.
தற்போது விமான சேவைகள் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. முக்கியமான சில நகரங்களுக்கு ஒருசில விமான நிறுவனங்கள் இயக்கப்படுகின்றன. ஆக இந்த விமான சேவைகள் அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் பல விமான நிலையங்கள் உள்ளன. அங்கும் விமான சேவைகள் வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் இந்திய சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்கும் வரும் போது இங்குள்ள சுற்றுலாத் துறையும் மேம்பாடு காணும்.
அதன் அடிப்படையின் மித்ரா சுற்றுலாத் துறை சார்ந்த பயிற்சிகளை இங்குள்ள இந்தியர்களுக்கு வழங்க வேண்டும்.
இதன் மூலம் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் உயரும். இது என்னுடையை ஆலோசனை மட்டுமே என்று அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
