நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய லாபு 4 தமிழ்ப்பள்ளிக்கான பிரதமரின் 2 மில்லியன் ரிங்கிட் பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது

சிரம்பான்:

புதிய லாபு 4 தமிழ்ப்பள்ளிக்கான பிரதமரின் 2 மில்லியன் ரிங்கிட் பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

லாபு 4 தமிழ்ப்பள்ளிக்காக மாநில அரசாங்கம் வழங்கிய 6 ஏக்கர் புதிய நிலத்தில் புதிய பள்ளிக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான ரிங்கிட் மலேசியா 9 மில்லியன் ரிங்கிட்  நிதி, பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிதி திரட்டும் விழாவில் வெற்றிகரமாக திரட்டப்பட்டது.

அந்நிகழ்வில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், பிரதமர் தத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  சார்பில் ரிங்கிட் மலேசியா 2 மில்லியன் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இன்று, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பள்ளிக்கு இன்று நேரில் வருகை தந்தார்.

பிரதமரின் சார்பாக ரிங்கிட் மலேசியா 2 மில்லியன் ரிங்கிட் தொகை பள்ளியின் பள்ளி வாரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார்.

இந்த நிதி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பள்ளிக் கட்டடம் அமைக்கும் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset