செய்திகள் விளையாட்டு
பிரேசில் கதையை முடித்த ஹாலண்ட்: உலகக் கிண்ண போட்டியில் நார்வே அபார வெற்றி
வாஷிங்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்றில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்தி நார்வே அணி காலிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் இறுதி கட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்து மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
உலகக் கிண்ண போட்டியின் ரவுண்ட்- 16 சுற்றில் நடந்த முக்கிய ஆட்டத்தில், 5 முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணி, நார்வேயை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
ஆட்டத்தின் பிற்பாதியில் ஆட்டம் அனல் பறந்தது.
கோல் அடிக்க இரு அணிகளும் மல்லுக்கட்டிய நிலையில், நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார்.
79ஆவது நிமிடத்தில் நார்வே அணியின் ஆண்ட்ரியாஸ் ஸ்க்செல்டெரப் கொடுத்த பந்தை, எர்லிங் ஹாலண்ட் மிக அழகாக கோலாக மாற்றி நார்வேயை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.
ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் பிரேசில் தற்காப்பு அரணை மீண்டும் தவிடுபொடியாக்கிய ஹாலண்ட், தனது 2ஆவது கோலை அடித்து நார்வேயின் வெற்றியை 2-0 என உறுதி செய்தார்.
இந்த தொடரில் ஹாலண்ட் அடிக்கும் 7ஆவது கோல் இதுவாகும்.
ஆட்டம் முடிய சில நொடிகள் இருந்தபோது பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதை பயன்படுத்தி பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஒரு கோல் அடித்தார்.
இருப்பினும் ஆட்ட நேர முடிவில் 2 - 1 என்ற கணக்கில் நார்வே அணி மாஸ் வெற்றி பெற்றது.
ஐந்து முறை உலகக் கிண்ண சாம்பியனான பிரேசில் அணி, நாக்-அவுட் சுற்றோடு மூட்டையைக் கட்டியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 5:17 pm
ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டி: நாளை வரலாறு படைக்குமா போர்த்துகல் அணி ?
July 6, 2026, 11:31 am
உலகக் கிண்ணம்: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 6, 2026, 10:44 am
அனைத்துலக காற்பந்து தொடர்களிலிருந்து பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் ஓய்வு
July 6, 2026, 10:42 am
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி தனது இறுதி போட்டியாகும்: கிரிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு
July 6, 2026, 9:08 am
அன்சிலோட்டியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரி பிரேசில் ரசிகர்கள் கொந்தளிப்பு
July 5, 2026, 10:02 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பே கோலால் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
July 5, 2026, 9:48 am
உலகக் கிண்ண காலிறுதி சுற்றில் மொராக்கோ: வெளியேறியது கனடா
July 4, 2026, 2:17 pm
