செய்திகள் விளையாட்டு
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டி தனது இறுதி போட்டியாகும்: கிரிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு
வாஷிங்டன்-
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி தான் தனது இறுதி உலகக் கிண்ண போட்டியாகும் என்று போர்த்துகல் நட்சத்திர ஆட்டக்காரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
41 வயதான கிரிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயின் அணியுடனான ஆட்டத்திற்கு முன்பாக இந்த அறிவிப்பினைத் தற்போது வெளியிட்டுள்ளார்.
ஆம், இது தான் எனது இறுதி உலகக் கிண்ண தொடராகும். ஆதலால் மகிழ்ச்சியோடு விளையாட போகிறேன் என்று ரொனால்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2003ஆம் ஆண்டு முதல் கிரிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் அணிக்காக அனைத்துலக அரங்கில் விளையாடி வருகிறார்.
முன்னாள் மென்செஸ்டர் யுனைடெட், ரியால் மெட்ரிட் அணியின் வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி ப்ரோ லீக் அணியில் உள்ள அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
போர்த்துகல் அணிக்காக ரொனால்டோ இதுவரை 232 முறை களம் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 5:17 pm
ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டி: நாளை வரலாறு படைக்குமா போர்த்துகல் அணி ?
July 6, 2026, 11:31 am
உலகக் கிண்ணம்: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 6, 2026, 10:44 am
அனைத்துலக காற்பந்து தொடர்களிலிருந்து பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் ஓய்வு
July 6, 2026, 9:08 am
அன்சிலோட்டியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரி பிரேசில் ரசிகர்கள் கொந்தளிப்பு
July 6, 2026, 9:08 am
பிரேசில் கதையை முடித்த ஹாலண்ட்: உலகக் கிண்ண போட்டியில் நார்வே அபார வெற்றி
July 5, 2026, 10:02 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பே கோலால் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
July 5, 2026, 9:48 am
உலகக் கிண்ண காலிறுதி சுற்றில் மொராக்கோ: வெளியேறியது கனடா
July 4, 2026, 2:17 pm
