நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈமான் கட்சியின் தேசியத் தலைவராக டத்தோ இஸ்மாயில் போட்டியின்றி தேர்வு 

கோலாலம்பூர்:

ஈமான் கட்சியின் ஆண்டுக் கூட்டம் நேற்று கொம்பாக் எலிசா கார்டன் மைய மண்டபத்தில் நடைபெற்றது. 

ஆண்டுகூட்டத்தில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியை சேர்ந்த 11 கட்சிகளின் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

டத்தோஸ்ரீ உத்தமா முக்ரிஸ் மகாதீர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அஹ்மத் யூனுஸ் பின் ஹைரி, தாமன் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிஃப் பஹ்ர்தீன், மாச்சான் சட்டமன்ற உறுப்பினர் வான் அஹமத் ஃபைசல், டத்தோ ஹாஜி வீரா மர்ஸுக்கி பின் யஹ்யா உட்பட 11 கட்சிகளின் பிரமுகர்கள் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 

தேர்தலில், துணைத் தலைவராக துவான் ஜபருல்லா பின் ஹாஜா ஹமீத், உதவித் தலைவர்களாக துவான் முஹம்மத் காசிம், துவான் முஹம்மத், ஹபீஸ் பின் அபூபக்கர், துவான் டைலான் பின் முஹம்மத் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மகளிர் பிரிவு தலைவியாக புவான் மஜ்னுன் மெஹர் பிந்தி ஷேய்க் அப்துல் காதர், இளைஞர் பிரிவுத் தலைவராக ரிஸ்வான் பின் ஆதம் ஷா, யுவதிகள் பிரிவுப் பொறுப்பாளராக புவான் நூரிசா ஹனீம் தேர்வு செய்யப்பட்டனர்.

உச்ச மன்ற உறுப்பினர்களாக டத்தோ டாக்டர் ஹாஜி அப்துல் ஹலீம், துவான் தாயபூ, டாக்டர் காசிம், துவான் அப்துல் ரஹ்மான், துவான் மஹ்பூஸ், புவான் ஜூனைனா, துவான் ஆரிப், துவான் அஸ்மி சதக்கத்துல்லா, துவான் முஹம்மத் ரித்வான், துவான் அப்துல் அஜீஸ், துவான் முஹம்மத் பசீர், டத்தோ அப்துல் காதர் பின் பஷீர் அஹ்மத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.   

முன்னதாக ஆண்டுகூட்டத்தில் 500 பேராளர்கள் கலந்து கொண்டதாக கட்சியின் தலைவர் டத்தோ இஸ்மாயில் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் தலைமுறையினரை கொண்டு சிறப்பாக செயலாற்ற முடியும் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் ஈமான் கட்சி இணையும் காலம் கனிந்துவிட்டது. விரைவில் நல்ல அறிவிப்பு வெளிவரும். ஒரே மேடையில் 11 கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்தது பெரும் சாதனையாக கருதுகிறேன் என்று அவர் தெரிவித்தார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset