நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் நடந்த நட்புமுறை ஆட்டத்தின் போது மின்னல் தாக்கியதில் வீரர் தனேஷ் மரணம்

அலோர்காஜா:

மலாக்காவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தின் போது மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் தனேஷ் மரணமடைந்தார்.

நேற்று மாலை சுமார் 5.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 28 வயதான ஆர். தனேஷ்,

அலோர் காஜா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மின்னல் தாக்கியதாக நம்பப்படும் நிலையில் மயக்க நிலையில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக இரவு 8.50 மணியளவில் அலோர் காஜா மருத்துவமனையிலிருந்து தமக்குத் தகவல் கிடைத்தது என்று அலோர் காஜா மாவட்ட போலிஸ் தலைவர் அஹ்மத் அபு பாக்கர் கூறினார்.

ரெம்பாவ் இந்தியர் வெட்டரன் எப்சி, தஞ்சோங் மின்யாக் எப்சி அணிகளுக்கு இடையேயான நட்பு முறை ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர் பங்கேற்றுக் கொண்டிருந்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆட்டம் தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, லேசாக மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் இடி முழக்கம் போன்ற சத்தம் கேட்டது.

அதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவரும் மேலும் இரண்டு நபர்களும் மைதானத்தில் சரிந்து விழுவதை அவரது நண்பர்கள் கண்டனர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்ற நிலையில் ஒரு பொது வாகனம் மூலம் அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே நேரத்தில், போட்டி நடுவர் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset