நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சர் அறிவித்துள்ள புதிய நடைமுறை; அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்: ஹேமலா

ஷாஆலம்:

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் அறிவித்துள்ள புதிய நடைமுறை அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.

ஏபி மஞ்சா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஹேமலா ஏபி சி சிவம் இதனை கூறினார்.

அந்நியத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒற்றை இலக்கவியல் தளமாக அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பின் (FWCMS) இ-கோட்டா (eQuota) பயன்படுத்தப்படும்.

இதன் மூலம் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள், நிறுவனங்கள் இன்று முதல் நேரடியாக இதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

நடுவில் எந்தவொரு தரப்பினரும் இல்லாமல் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் இந்திய தொழில் துறைகளும் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த வரவேற்பு தொழில் துறையினரே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு தொழில் முனைவர் என்ற அடிப்படையில் இப்புதிய நடைமுறையை நான் வரவேற்கிறேன்.

காரணம் அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்போது அத்தொழில் துறையினர் நேரடியால் தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் நிச்சயம் தொழிலாளர்களுக்கான அனுமதி கிடைக்கும்.

அதே வேளையில் இலக்கவியல் வாயிலாக விண்ணப்பம் செய்வதால் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும். எந்தவொரு குளறுபடிகளும் இருக்காது.

ஆகவே இப்புதிய நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்த அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஹேமலா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset