நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விடுவிப்பது மாமன்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அஸாலினா ஒத்மான் 

கோலாலம்பூர்- 

நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை விடுதலை செய்வது என்பது மாட்சிமை தங்கிய மாமன்னரின் மன்னிப்பு வாரியத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று அம்னோவின் தகவல் பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் கூறினார். 

நஜிப் ரசாக்கின் விடுதலை விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

மன்னிப்பு வாரியம் ஒருவரை விடுதலை செய்ய இணக்கம் தெரிவிக்கிறது. இந்த மன்னிப்பு வாரியத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்குகிறார். 

முன்னதாக, நஜிப் ரசாக்கை விடுதலை செய்யவே தேசிய முன்னணி ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிடுகிறது என்றும் யாரோ சிலர் ஜொகூர் தேர்தல் அவசியமாகிறது காரணம் அவர்கள் வெற்றிப் பெற முடியும் என்று எண்ணுவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார். 

எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் வழக்கு காரணமாக நஜிப் ரசாக்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டுகளில் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது 210 ரிங்கிட் அபராதமும் 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது. 

டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி, 2028ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset