செய்திகள் மலேசியா
ஜொகூரின் வடப் பகுதிகளின் வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது: யுனேஸ்வரன்
சிகாமாட்:
ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சி தெற்குப் பகுதிகளில் மட்டுமல்லாமல், வட பகுதிக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.
தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாரு, தெற்கு ஜொகூர் அம்மாநிலத்தின் முக்கியப் பொருளாதார மையங்களாக விளங்கினாலும், சிகாமாட், தங்காக், மூவார் உள்ளிட்ட வடப் பகுதிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கக் கூடாது.
ஜொகூரின் வடப் பகுதியில் வாழும் மக்களும் வரி செலுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்து வருவதாகவும், அவர்களுக்கும் சமநிலையான வளர்ச்சி, தரமான உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்க வேண்டியது அவர்களின் உரிமை.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை உயரமான கட்டடங்கள், ஆடம்பர வணிக வளாகங்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் மட்டும் அளவிட முடியாது.
ஒவ்வொரு மாவட்ட மக்களும் வேலைவாய்ப்பு, முதலீடு, நவீன போக்குவரத்து, தரமான உள்கட்டமைப்பு, பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதே உண்மையான வளர்ச்சி என்று அவர் தெரிவித்தார்.
வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வடப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜொகூர் பாரு, கோலாலம்பூர், சிங்கப்பூருக்கு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்முனைவோர் அதிகப் போக்குவரத்து செலவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிகாமாட் உள்நாட்டு துறைமுகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார்.
சிகாமாட் உள்நாட்டு துறைமுகம் ஒரு தளவாட மையமாக மட்டும் இல்லாமல், ஜொகூரின் வடப் பகுதியின் பொருளாதார எழுச்சிக்கான தொடக்கமாக அமையும்.
சாலை–ரயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முறை நடைமுறைக்கு வந்தால் தளவாடச் செலவு குறைவதோடு, பொருட்கள் விரைவாகக் கொண்டு செல்லப்படும் என்பதால், மேலும் பல நிறுவனங்கள் வடக்கில் முதலீடு செய்ய முன்வரும் என்று அவர் கூறினார்.
எனினும், சிகாமாட் உள்நாட்டு துறைமுகம் மட்டுமே போதுமானதல்ல என்றும், வடக்கு ஜொகூரின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 6:27 pm
ஈமான் கட்சியின் தேசியத் தலைவராக டத்தோ இஸ்மாயில் போட்டியின்றி தேர்வு
July 6, 2026, 5:54 pm
மேடையில் சுல்தான் நஸ்ரினை இழுத்த பெண்மணிக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிப்பு
July 6, 2026, 3:44 pm
மலாக்காவில் நடந்த நட்புமுறை ஆட்டத்தின் போது மின்னல் தாக்கியதில் வீரர் தனேஷ் மரணம்
July 6, 2026, 1:36 pm
ஜோகூர் தேர்தல்: வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்புகிறீர்களா?
July 6, 2026, 1:01 pm
