செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்திய தொழில் துறைகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்; தேவைக்கு மிஞ்சிய கோரிக்கைகள் வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்திய தொழில் துறைகளின் விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்படும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள், அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பில் (FWCMS) உள்ள eQuota மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள், நிறுவனங்கள் இன்று முதல் நேரடியாக இதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக நடுவில் எந்தவொரு தரப்பினரும் இல்லாமல் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.
அவ்வகையில் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் இந்திய தொழில் துறைகளும் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும்.
ஆக அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்று சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக உண்மையாகவே தேவைப்படும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே கோரிக்கையை முன்வையுங்கள்.
1000 பேரை கேட்கும் இடத்தில் உண்மையில் 10 பேர் மட்டுமே தேவைப்படுவார்கள்.
இந்த விஷயம் தெரிய வந்தால் முதலாளிகளுக்கு தான் பாதிப்பாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 6:27 pm
ஈமான் கட்சியின் தேசியத் தலைவராக டத்தோ இஸ்மாயில் போட்டியின்றி தேர்வு
July 6, 2026, 5:54 pm
மேடையில் சுல்தான் நஸ்ரினை இழுத்த பெண்மணிக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிப்பு
July 6, 2026, 5:46 pm
ஜொகூரின் வடப் பகுதிகளின் வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது: யுனேஸ்வரன்
July 6, 2026, 3:44 pm
மலாக்காவில் நடந்த நட்புமுறை ஆட்டத்தின் போது மின்னல் தாக்கியதில் வீரர் தனேஷ் மரணம்
July 6, 2026, 1:36 pm
ஜோகூர் தேர்தல்: வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்புகிறீர்களா?
July 6, 2026, 1:01 pm
