செய்திகள் மலேசியா
மேடையில் சுல்தான் நஸ்ரினை இழுத்த பெண்மணிக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிப்பு
பெட்டாலிங் ஜெயா-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேராக் மாநில ஆட்சியாளர், சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷாவை மேடையில் இழுத்து சர்ச்சையை ஏற்படுத்திய பெண்மணிக்கு எதிராக 500 ரிங்கிட் அபராதம் விதித்து ஈப்போ மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது
குற்றஞ்சாட்டப்பட்ட 42 வயதான நுர்ஹஸ்வானி அஃப்னி முஹம்மத் சொர்கி குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஒருவேளை அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் முன்னாள் துரித உணவக பணியாளரான அந்த மாது ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது
கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி மெர்டேக்கா தின நிகழ்ச்சியின் போது பேராக் மாநில ஆட்சியாளர், மேன்மை தங்கிய சுல்தான் நஸ்ரின் அவர்களை இழுத்து பெரும் குற்றத்தை புரிந்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 352யின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்தாண்டு இதே குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் அந்த மாது குற்றஞ்சாட்டப்பட்டபோது அவர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் உலு கிந்தாவில் உள்ள மனநல மருத்துவமனையில் அவர் மனநல பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 6:27 pm
ஈமான் கட்சியின் தேசியத் தலைவராக டத்தோ இஸ்மாயில் போட்டியின்றி தேர்வு
July 6, 2026, 5:46 pm
ஜொகூரின் வடப் பகுதிகளின் வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது: யுனேஸ்வரன்
July 6, 2026, 3:44 pm
மலாக்காவில் நடந்த நட்புமுறை ஆட்டத்தின் போது மின்னல் தாக்கியதில் வீரர் தனேஷ் மரணம்
July 6, 2026, 1:36 pm
ஜோகூர் தேர்தல்: வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்புகிறீர்களா?
July 6, 2026, 1:01 pm
