நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூமிபுத்ரா தொழில்முனைவோருக்கு 2030க்குள் 2.25 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி இலக்கு: PUNB அறிவிப்பு

புத்ராஜெயா: 

தேசிய தொழில்முனைவோர் கழகம் (PUNB), 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் 2.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவிக்கு ஒப்புதல் வழங்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. பூமிபுத்ரா தொழில்முனைவோர் நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

R30 மூலோபாயத் திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள இந்த நீண்டகால இலக்கு, பூமிபுத்ரா தொழில்முனைவோரின் வணிக விரிவாக்கம், போட்டித்திறனை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

PUNB-யின் 35-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற SParK 2026 நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பூமிபுத்ரா மேம்பாட்டுத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தும் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றாக PUNB திகழ்கிறது என்று பாராட்டினார்.

PUNB-யின் செயல்திறன் தொடர்ந்து சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் அதன் நிதியுதவி, ஆதரவை மேலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

தொழில்முனைவோர், பெருநிறுவனத் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகளை ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில், மாநாடுகள், அறிவுப் பகிர்வு அமர்வுகள், வணிகக் கண்காட்சிகள், விற்பனை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset