நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் அரண்மனையை மதிக்கும் பொருட்டு நம்பிக்கை கூட்டணிக்கு மந்திரி பெசார் வேட்பாளர் இல்லை

ஜொகூர் பாரு-

ஜொகூர் மாநில தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பாக யாரையும் மாநில மந்திரி பெசார் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

ஜொகூர் அரண்மனை மற்றும் அரசவைக்கு வழங்கும் மரியாதை பொருட்டு இந்த நடவடிக்கையை நம்பிக்கை கூட்டணி எடுத்ததாக டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார்.

ஜொகூர் சுல்தானின் அதிகாரத்திற்கு வரும் இந்த மந்திரி பெசார் பதவி நியமனமானது அரசியல் தலையீடு எதுவும் இருக்காது.

மாநில தேர்தல் முடிவுக்கு முன் மந்திரி பெசார் யார் என்ற அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது தான் நம்பிக்கை கூட்டணியின் நிலைப்பாடாகும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

ஜொகூர் மாநிலத்திற்கு சிறந்த ஆட்சியையும் தலைமைத்துவ பண்பையும் கொண்ட ஒரு வேட்பாளரையே நம்பிக்கை கூட்டணி களமிறக்கும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

முன்னதாக, ஜொகூர் நம்பிக்கை கூட்டணி சார்பாக மந்திரி பெசார் வேட்பாளராக டாக்டர் மஸ்லீ மலிக் முன்மொழியப்படலாம் என்று ஆருடம் வெளியிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset