நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லயாங்-லயாங் மக்களின் உருமாற்றத்திற்கு வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வாக்களிக்க வேண்டும்: குணா பாலகிருஷ்ணன்

ரெங்காம்:

லயாங்-லயாங் மக்களின் உருமாற்றத்திற்கு வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வாக்களிக்க வேண்டும்.

லயாங்-லயாங் சட்டமன்றத் தொகுதி நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன் இதனை கூறினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு வாரக் காலமாக இங்குள்ள மக்களை சந்தித்து  வாக்குகளை சேகரித்து வருகிறேன்.

அப்போது மக்களிடம் இருந்து பல்வேறு குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறேன்.

லயாங்-லயாங் தொகுதியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் உருமாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

அதே வேளையில் இங்குள்ள இளைஞர்களுக்காக அதிகமான வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக இங்குள்ளவர்களுக்காக உழைக்கும் பிரதிநிதியை மக்கள் விரும்புகின்றனர்.

ஆக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் இந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன் என்று குணா கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நிலையான ஆட்சி ஜொகூரிலும் தொடர வேண்டும்.

மேலும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தலைமையிலான மக்கள் திட்டங்களையும் இத்தொகுதிக்கு கொண்டு வருவேன்.

ஆகையால் வரும் தேர்தல் வாக்காளர்கள் எனக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று குணா கேட்டுக் கொண்டார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset