நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் ஒரு கடற்கரைக்குக் கோல்காவலர் பெட்ரிக் பெயர் சூட்டப்பட்டது

மெல்பர்ன்:

ஆஸ்திரேலியாவில் ஒரு கடற்கரைக்குக் கோல்காவலர் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
கோல்காவலர் பெட்ரிக் பீச் (Patrick Beach). அவருடைய பெயரிலேயே கடற்கரை உள்ளது.

அவர் உலகக் கிண்ணப் போட்டியில் துருக்கியேவுடன் ஆஸ்திரேலியா மோதிய முதல் ஆட்டத்தில் பெட்ரிக் பீச் ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.

அதில் அவர் சிறப்பாக ஆடி பல கோல்களை தடுத்தார். 

Australia World Cup goalkeeper Patrick Beach has beach named after him

அமெரிக்கா, பராகுவே அணிகளோடு ஆஸ்திரேலியா ஆடியபோது அவரே கோல்காவலர்.
இரண்டு ஆட்டங்களில் கோல் எதுவும் நுழையாமல் பார்த்துக் கொண்ட பெட்ரிக் பீச் இப்போது ஆஸ்ரேலியக் கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

மெல்பர்ன் நகரில் உள்ள செயிண்ட் கில்டா கடற்கரைக்குத் தற்காலிமாக பெட்ரிக் பீச் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset