நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சி அசத்தல்: ஜோர்டானை வீழ்த்திய அர்ஜெண்டினா

டல்லாஸ்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ஜே பிரிவு லீக் ஆட்டத்தில், அர்ஜெண்டினா அணி ஜோர்டானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டல்லாஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இருப்பினும் அர்ஜெண்டினாவே ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் ஜியோவானி லோ செல்சோ கோல் அடித்து அர்ஜெண்டினாவை 1-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து 31ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதை லவுடாரோ மார்டினஸ் துல்லியமாக கோலாக மாற்றி அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியவில்லை.

இதனால் முதல் பாதி முடிவில் அர்ஜெண்டினா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பிற்பாதியில் முதல் கோலை தேடி ஜோர்டான் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.

அதன் பலனாக, ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் மூசா அல்-தாமரி கோல் அடித்து ஜோர்டானின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 80ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இதன்பின் இரு அணிகளும் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மேலும் எந்த கோலும் பதிவாகவில்லை.

இறுதியில், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி 3 புள்ளிகளை கைப்பற்றியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset