நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாஸ் கட்சியின் வழிகாட்டுதலை பெர்சத்து பின்பற்றவில்லை: டான்ஸ்ரீ மொஹைதின்

பாகோ:

தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாஸ் கட்சியின் வழிகாட்டுதலை  பெர்சத்து கட்சி பின்பற்றவில்லை.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசி இதனை கூறினார்.

தேசிய முன்னணி  வேட்பாளர்களை ஆதரிக்குமாறு தனது உறுப்பினர்களுக்கு  பாஸ் அறிவுறுத்தியுள்ளது.

அக்கட்சியைப் போலல்லாமல், தேசியக் கூட்டணியில் போட்டியின்றி உள்ள இடங்களில் மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு பெர்சத்து தனது ஆதரவாளர்களுக்கு குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கவில்லை.

மறுபுறம், கூட்டணியிலிருந்து எந்த வேட்பாளரும் போட்டியிடாத பட்சத்தில், தேசியக் கூட்டணி கட்சியைத் தவிர தங்கள் கட்சியைச் சேர்ந்த வேறு எந்தக் கட்சியையும் ஆதரிப்பது குறித்து உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தாங்களாகவே முடிவெடுப்பது அவர்களது விருப்பம்.

சில சமயங்களில், தேசியக் கூட்டணியை தவிர போட்டியிடும் கட்சியை அவர்களுக்குப் பிடிக்காததால், அவர்கள் வாக்களிக்க விரும்பாத சூழல்களும் உள்ளன.
ஆக இவ்விவகாரத்தில் யாரும் குழப்பமடைய வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset