செய்திகள் மலேசியா
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு:
ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்காக அம்னோ, பாஸ் இடையே ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான ரகசிய சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று ஜோகூர் சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டத்தோ முஹம்மது புவாட் சர்காஷி கூறினார்.
பாஸ் உடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இதுபோன்ற முயற்சிகள், கடந்த ஜோகூர் தேர்தலின்போதும் மலாய் தேசியவாதக் கட்சித் தலைவர்களிடையே இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
அம்னோவின் முன்னாள் உச்ச மன்ற உறுப்பினரான புவாட், ஆரம்ப ஒப்பந்தத்தின்படி பாஸ் கட்சி ஜோகூர் மாநிலத் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்றும், இது பாரிசான் நேஷனல் அனைத்து 56 தொகுதிகளிலும் வெற்றிபெற வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம், ஜோகூரில் தங்கள் கட்சி வெற்றிபெற முடியும் என்று பல அம்னோ தலைவர்களை அதீத தன்னம்பிக்கை கொள்ளச் செய்ததாக அவர் கூறினார்.
மாநிலத் தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ வெற்றி பெறுவதே இலக்காக இருந்தால் மட்டுமே பாஸ் உடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று அவரும் மேலும் பல உச்ச மன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைமைக்கு நினைவூட்டினர் என்றும் அவர் கூறினார்.
"இருப்பினும், இந்த ஒத்துழைப்பு உம்மாவை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், அது வெற்றிபெறாது.
"அதற்குப் பதிலாக, டான் ஸ்ரீ கனி ஓத்மான் தலைமை தாங்கும் தேசிய முஷாவாரா கவுன்சிலில் கவனம் செலுத்துவது சிறப்பாக இருக்கும்," என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் இன்னும் சிறையில் இருப்பது சரிதான் என்று நம்புபவர்களும் அம்னோவில் உள்ளனர் என்று புவாட் கூறினார்.
அவர்களைப் பொறுத்தவரை, நஜிப்பின் விடுதலையைவிட அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள். அப்போது அவர் ஜோஹோரில் பிரச்சாரத்திற்கு உதவ முடியும் என்று அவர் கூறினார்.
"இந்த நிலைமை சில அம்னோ தலைவர்களை அகங்காரம், அதீத தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்றியுள்ளது," என்று அவர் கூறினார்.
பெரும்பாலும் வெளிப்படையாகப் பேசும் புவாட், ஜோஹோர் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர் பட்டியலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ஜூன் 25 அன்று அம்னோவிலிருந்து விலகினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:29 pm
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
June 29, 2026, 3:03 pm
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:24 pm
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
June 29, 2026, 12:23 pm
