நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெற்கு தாய்லாந்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்

கோத்தாபாரு:

தாய்லாந்தின் நாரதிவாட் மாநிலத்தில் உள்ள டாக் பாய் என்ற எல்லை நகரத்தில் இன்று பிற்பகல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்தனர்.

பிற்பகல் 12.40 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட இருவரும் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக கிளந்தான் போலிஸ்  தலைவர் யூசோப் மாமாட் கூறினார்.

38 மற்றும் 45 வயதுடைய பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் காயங்கள் ஏற்பட்டதோடு, அவர்கள் பயணித்த வாகனமும் குண்டு வெடிப்பில் சேதமடைந்தது.

பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது நாரதிவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் வாகனத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், ஆனால் மற்றொரு பயணி காயமின்றி உயிர் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset