செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் சங்கர நாராயணன் இன்று நியமனம் செய்யப்பட்டார்.
கல்வியமைச்சர் பட்லினா சிடேக்கின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய இவர் இன்று முதல் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பராக பொறுப்பு ஏற்றார்.
இன்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு நியமன உறுதி கடிதத்தை டத்தோ பண்டார் Datuk Seri TPr Fadlun bin Mak Ujud வழங்கினார்.
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டரசு பிரதேச கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவருமான இவர் லெம்பா பத்தாய் தொகுதி கெஅடிலான் தலைவராகவும் இருக்கிறார்.
தம் மீது நம்பிக்கை வைத்து கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பராக நியமனம் செய்த மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தியாகராஜ் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரியாக 17 ஆண்டுகளாக இவர் பணியாற்றி இவர் அரசியலில் காலடி எடுத்து வைத்து சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினர் பதவி தமக்கு வழங்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
மக்களின் குறைகளை கேட்டறிந்து சிறந்த முறையில் அவற்றுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன் என்று தியாகராஜ் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:48 pm
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
June 29, 2026, 4:29 pm
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:24 pm
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
June 29, 2026, 12:23 pm
