நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்; தேசிய முன்னணி வேட்பாளர் விவகாரங்களுக்கு ஹசான் தலைமையேற்பார்: ஜாஹித்

சிரம்பான்:

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் கூட்டணி போட்டியிடும் வேட்பாளர்கள், இடங்கள் குறித்த விவரங்களை நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத்  ஹசான் முன்னின்று முடிவு செய்வார்.

இந்த விவகாரம் குறித்த கலந்துரையாடல்களில் நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ், மாநில பிஎன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ  ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

அம்னோ, நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி ஆகியவை தற்போது முன்னிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களின் விவரங்களை தயாரித்து வருகின்றன.

இந்த விவரங்களை நெகிரி செம்பிலான் முஹம்மத் ஹசானிடம் விட்டுவிடுகிறேன்  என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset