செய்திகள் மலேசியா
331 பேர் கைது; சட்டவிரோத உலகக் கிண்ண பந்தயம் 2.62 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
நாட்டில் சட்டவிரோத உலகக் கிண்ண பந்தயம் 2.62 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை தெரிவித்தார்.
தற்போதைய 2026 பிபா உலகக் கிண்ண போட்டியை முன்னிட்டு, 2.62 மில்லியன் ரிங்கிட்டை எட்டிய சட்டவிரோத பந்தயத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மூலம் நாடு தழுவிய அளவில் மொத்தம் 234 உள்ளூர்வாசிகள், 97 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 11 முதல் நடத்தப்பட்ட 293 சோதனைகளில், சட்டவிரோத பந்தயம், இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 312 ஆண்கள், 19 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் போலிசார் மொத்தம் 145,005.09 ரிங்கிட் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.
அதே வேளையில் 2,625,529.46 ரிங்கிட் பந்தய மதிப்பையும் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:48 pm
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
June 29, 2026, 4:29 pm
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
June 29, 2026, 3:03 pm
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:24 pm
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
June 29, 2026, 12:23 pm
