செய்திகள் மலேசியா
சொக்சோ மறுவாழ்வு மையங்களைப் பொது நோயாளிகள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சும் மனிதவள அமைச்சும் விவாதித்தன: சூல்கிப்லி
கோலாலம்பூர்:
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட பொது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சொக்சோவுக்கு சொந்தமான உலகத் தரம் வாய்ந்த மறுவாழ்வு மையங்களைப் பயன்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
சுகாதார அமைச்சின் மறுவாழ்வு மையங்களில் நிலவும் நெரிசல் மற்றும் நிபுணத்துவப் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளைச் சமாளிக்க, அமைச்சுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்லி அஹ்மத் கூறினார்.
தற்போது சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
ஏனெனில் சொக்சோ மையங்கள் 1969ஆம் ஆண்டின் பணியாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் செயல்படுகின்றன.
அச்சட்டம், பங்களிப்பாளர்களுக்கு மட்டுமே சிகிச்சையை வழங்குகிறது. ஆனால், சுகாதார அமைச்சகம் 1998ஆம் ஆண்டின் தனியார் சுகாதார வசதிகள், சேவைகள் சட்டத்தின் (சட்டம் 586) கீழ் செயல்படுகிறது.
இந்தத் தடையை நாம் உடனடியாகக் கையாள்வது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன்.
சொக்சோவின் கீழ் உள்ள மறுவாழ்வுத் துறையானது, நரம்பியல் ரோபோடிக்ஸ், மீண்டும் நட திட்டம் போன்ற உலகத் தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது.
எனவே, சுகாதார சேவைகள் வெளிப்பணித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சிற்கு வழிவகை செய்ய, கலந்துரையாடல்கள் உடனடியாகத் தொடர வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:48 pm
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
June 29, 2026, 4:29 pm
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
June 29, 2026, 3:03 pm
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:24 pm
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
June 29, 2026, 12:23 pm
