செய்திகள் மலேசியா
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
காஜாங்:
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காஜாங்கில் உள்ள தாமான் இம்பியான் இந்தாவில் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
இந்த துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், குடியிருப்பாளர் ஒருவர் இரவு 7 மணிக்கு போலிசாரை தொடர்பு கொண்டதை அடுத்து அந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் போலிஸ் ஆய்வு நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் வீட்டை சோதனை செய்தபோது, பயணப் பெட்டியில் ஒரு பெண்ணின் சடலத்தையும் கண்டுபிடித்தனர்.
முன்னதாக காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர், நஸ்ரோன் அப்துல் யூசோப் இந்த சம்பவத்தை உறுதி செய்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:48 pm
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
June 29, 2026, 4:29 pm
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
June 29, 2026, 3:03 pm
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:23 pm
