செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: இங்கிலாந்து, குரோஷியா முன்னேற்றம்
நியூஜெர்சி:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32க்கு இங்கிலாந்து, குரோஷியா அணிகள் முன்னேற்றியுள்ளன.
மெட்லைப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் பனமா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பனமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை ஜூல் பெலிங்காம், ஹாரி கேய்ன் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் எல் பிரிவில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தனர்.
இதம் மூலம் அடுத்த சுற்றுக்கும் இங்கிலாந்து அணியினர் முன்னேறி உள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
குரோஷியா அணியின் வெற்றி கோல்களை பீட்டர் சுஜிக், நிகோலா விலாசிக் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து குரோஷியா அணியினரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 4:12 pm
உலகக் கிண்ண போட்டி: ஆஸ்திரியா, அல்ஜீரியா மோதிய விறுவிறுப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 28, 2026, 3:47 pm
ஆஸ்திரேலியாவில் ஒரு கடற்கரைக்குக் கோல்காவலர் பெட்ரிக் பெயர் சூட்டப்பட்டது
June 28, 2026, 12:42 pm
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சி அசத்தல்: ஜோர்டானை வீழ்த்திய அர்ஜெண்டினா
June 28, 2026, 11:45 am
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஈராக்கை துவம்சம் செய்த செனகல் அணி
June 28, 2026, 9:54 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் அணி ஏமாற்றம்
June 27, 2026, 12:11 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோப்வெர்டே அணி சாதனை
June 27, 2026, 12:09 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் முன்னேற்றம்
June 27, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் அசத்தல் வெற்றி
June 26, 2026, 3:57 pm
