நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் அணி ஏமாற்றம்

மியாமி:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொலம்பியா, போர்த்துகல் இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

மியாமியில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின.

இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற தவறின.

மேலும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்ததால் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது.

பிற்பாதியிலும் முதல் கோலை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக முயற்சித்தன.

ஆனால், கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் வீரர்களின் உறுதியான தற்காப்பும், கோல்காவலர்களின் அபாரமான ஆட்டத்தின் காரணமாக எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால், பரபரப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

மற்றொரு ஆட்டத்தில் டிஆர் காங்கோ அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset