நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தலில் எம்ஐபிபி கட்சி 5 தொகுதிகளில் போட்டி: புனிதன்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் இதனை அறிவித்துள்ளார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் எம்ஐபிபி மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

தேசியக் கூட்டணியின் கீழ் அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடவுள்ளது.

எம்ஐபிபி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் புனிதன் இன்று அறிவித்தார்.

இதில் கோத்தா இஸ்கண்டாரில் அனா பிரவினா, புக்கிட் பெர்மாயில் லினா மனோ, பாலோவில் ஜீவகுமார், பெமானிசில் டாக்டர் அர்விந்த், பெர்மாஸில் வேலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


மேலும் இத்தேர்தல் எம்ஐபிபி கட்சிக்கு மிகப் முக்கியமான தேர்தல் ஆகும்.

ஆக இத்தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற எம்ஐபிபி இறுதிவரை உழைக்கும்.

அதே வேளையில் எம்ஐபிபி கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கிய தேசியக் கூட்டணி தலைமைத்துவத்திற்கும் எனது நன்றி என்று புனிதன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset