செய்திகள் உலகம்
பெண்ணை கடத்தி சித்திரவதை செய்த இந்தியருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது
லண்டன்:
தாய்லாந்தில் இருந்து மர்ம பொருட்கள் அடங்கிய பெட்டியை கொண்டு வர மறுத்த பெண்ணை கடத்தி சித்திரவதை செய்த இந்தியருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், தாய்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு மர்ம பொருட்கள் அடங்கிய பயணப்பெட்டியை கொண்டு வருமாறு 24 வயது இளம்பெண் ஒருவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், பர்மிங்காம் விமான நிலையம் வந்திறங்கிய அந்த பெண்ணை முகமூடி அணிந்த கும்பல் காரில் கடத்திச் சென்றது.
மேற்கு லண்டனின் ஹேன்வெல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண், ஒரு நாளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார்.
அந்த பெண்ணை முகத்தில் குத்தியும், நிர்வாணப்படுத்தியும், சாட்டையால் அடித்தும், உடலில் சூடு வைத்தும் சித்திரவதை செய்ததோடு, ககன்தீப் சிங் (34) என்பவர் இரண்டு முறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த பெண் தனது தாயிடம் இது குறித்து தெரிவித்தார்.
போலீசார் நடத்திய தடய அறிவியல் சோதனையில், பெண்ணின் உடையில் இருந்த 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய மரபணு தடயங்கள் மூலம் ககன்தீப் சிங் பிடிபட்டார்.
லண்டன் வான்ட்ஸ்வொர்த் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியான ககன்தீப் சிங் (34), ஏற்கனவே வேறொரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்காக லண்டன் ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முடியாதவாறு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
