செய்திகள் உலகம்
4 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்
பாங்காக்:
பல ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல், தனது 47வது வயதில் காலமானார். தாய்லாந்தின் 73 வயதான மன்னருக்கும், அவரது முதல் மனைவி இளவரசி சோம்சாவலிக்கும் பிறந்த மூத்த மகள் பஜ்ரகிதியாபா மஹிடோல். இவர் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ், தாய்லாந்தின் மறைந்த முன்னாள் ராணி சிரிகிட் ஆகியோரின் முதல் பேத்தி ஆவார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.
அவர் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது வயிற்றில் தொற்று கண்டறியப்பட்டதன் விளைவாக, பெருங்குடலில் அழற்சி ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டவில்லை.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல், தனது 47வது வயதில் காலமானார் என்று அரசு அரண்மனை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இளவரசி பஜ்ரகித்தியபா உடலிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
