நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற பிறகு ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான சிறப்புக் கூட்டத்தின் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும்

புத்ராஜெயா:

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற பிறகு ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான சிறப்புக் கூட்டத்தின் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும்.

தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ  ரம்லான் ஹரூன் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம்  கலைக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து பெற்றவுடன், தேர்தல் ஆணையம்  ஜொகூர் மாநிலத் தேர்தலுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து விவாதிக்கப்படும்.

15ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றம் இன்று 2026 ஜூன் 1ஆம் தேதியன்று கலைக்கப்படுவது தொடர்பாக ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஸி நடத்திய செய்தியாளர் சந்திப்பை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது.

ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்து ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்க வேண்டும்.

இதைத் தொடரந்து ஜொகூர் மாநில தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்








தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset