செய்திகள் மலேசியா
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களில் புதிய கட்டுப்பாடு
புத்ராஜெயா:
மலேசியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் நோக்கில், 2025 இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் (ஒண்சா) கீழ் குழந்தைகள் பாதுகாப்புக் குறியீடு (சிபிசி), இடர் குறைப்புக் குறியீடு (ஆரஎம்சி) ஆகியவற்றை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.
புதிய விதிமுறையின்படி, 16 வயது, அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சமூக ஊடகக் கணக்குகளைத் திறந்து பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இதற்காக, பயனர்களின் வயது அரசாங்க ஆவணங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பதிவுகள் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியுப் உள்ளிட்ட உரிமம் பெற்ற சமூக ஊடக தளங்கள், வயது சரிபார்ப்பு முறையைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எம்சிஎம்சி வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே கணக்குகள் வைத்திருக்கும் பயனர்களுக்கான வயது சரிபார்ப்பு நடவடிக்கை, அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும். 16 வயதுக்குக் குறைவானவர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு, அவர்களது புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய அல்லது மாற்றிக்கொள்ள ஒரு மாத அவகாசம் வழங்கப்படும்.
எம்சிஎம்சி, சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இணங்கத் தவறினால் கடுமையான ஒழுங்குமுறை, அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், ஆர்எம்சி வழியாக சமூக ஊடக நிறுவனங்கள் இடர் மதிப்பீடு, உள்ளடக்கக் கண்காணிப்பு, பயனர் பாதுகாப்பு வசதிகள், தளப் பொறுப்புணர்வை வலுப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அமலாக்கம், குழந்தைகளை இணைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் மலேசியாவின் மிக முக்கியமான டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 1, 2026, 10:34 pm
ஜொகூர் மாநில தேர்தலை எதிர்கொள்ள தேசியக் கூட்டணி தயார்: அஹ்மத் சம்சுரி
June 1, 2026, 5:35 pm
ஜொகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது; அடுத்த 60 நாட்களில் தேர்தல்: மந்திரி புசார் அறிவிப்பு
June 1, 2026, 5:34 pm
ஐந்து வாகனங்கள் மோதிய கோர விபத்து: 4 பேர் பலி
June 1, 2026, 5:21 pm
“பணம் இல்லையென்றாலும் பல்கலைக்கழகக் கனவு தடைபடாது”: மாணவர்களுக்கு அமைச்சர் ஜம்ரிஉறுதி
June 1, 2026, 4:30 pm
