நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து வாகனங்கள் மோதிய கோர விபத்து: 4 பேர் பலி

குளுவாங்: 

ஜாலான் ரெங்காம்–சிம்பாங் ரெங்காம் சாலையில், சிம்பாங் ரெங்காம் சிறைச்சாலைக்கு அருகே இன்று நண்பகல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து நால்வரின் உயிரைப் பறித்தது. ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதியம் சுமார் 1 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், Perodua Alza, Proton Wira, Mercedes-Benz, BMW, Toyota Vios ஆகிய ஐந்து வாகனங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் Toyota Vios வாகனத்தில் பயணித்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்களில் 10 வயது சிறுமியும், 73 வயது முதியவரும் அடங்குவதால் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெங்காம் தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரிகள் தெரிவிக்கையில், பலியானவர்களில் ஒருவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த Mercedes-Benz வாகனத்தின் கூரையில் விழுந்ததாக கூறினர்.

அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களில் Perodua Alza ஓட்டுநர், BMW ஓட்டுநர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Proton Wira ஓட்டுநர், Mercedes-Benz வாகனத்தில் பயணித்த நால்வர் உட்பட பலர் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த துயரச் சம்பவம், சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. சம்பவத்திற்கான முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset