நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய பகுதிநேர வேலை மோசடி: குறுகிய கால லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த நபர்

மீரி: 

அதிக வருமானம் தரும் இணைய பகுதி நேர வேலை என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை நம்பிய 50 வயதுடைய ஒருவர், மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி 396,850 ரிங்கிட்டை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட நபர், மின்-வணிக தளத்தில் வாடிக்கையாளர் ஆர்டர்களை நிர்வகித்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 10% கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பொருட்களைச் செயல்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவும் வேண்டும் என்ற பெயரில், பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு தொடர்ந்து பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

கணினி அமைப்பில் லாபம் காட்டப்பட்ட போதிலும், அந்தப் பணத்தை எடுக்க முயன்ற ஒவ்வொரு முறையும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் விளைவாக, தனது சேமிப்புத் தொகை மட்டுமன்றி, குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கிய பணத்தையும் சேர்த்து இழந்துள்ளார்.

போலிஸாரின் கூற்றுப்படி, இது ‘Task Scam’, ‘Merchant Scam’ அல்லது ‘E-Commerce Scam’ எனப்படும் மோசடி முறையாகும். இதில், அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பணம் செலுத்த வைக்கப்படுகின்றனர். ஆனால், காட்டப்படும் லாபம் வெறும் கணினி திரையிலான போலி எண்ணிக்கையாகவே இருக்கும்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறும் வேலை வாய்ப்புகள், முதலீட்டு திட்டங்களை நம்புவதற்கு முன், பொதுமக்கள் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என போலிஸார் எச்சரித்துள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset