நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் வான் காவலர்களுக்கு பிரதமரின் வீர வணக்கம்: தி.யூ.டி.எம்-இன் 68வது ஆண்டு விழா சிறப்பு

கோலாலம்பூர்: 

நாட்டின் வான் எல்லையை அச்சமின்றி காக்கும் அரச மலேசிய விமானப்படை (தி.யூ.டி.எம்) தனது 68வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், அதன் வீர உறுப்பினர்கள், முன்னாள் படைவீரர்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உயரிய பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "துணிச்சல், தொழில்முறை திறன், தியாக மனப்பான்மையுடன் நாட்டின் வான் பாதுகாப்பின் அரணாக தி.யூ.டி.எம் தொடர்ந்து விளங்கி வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, அமைதியை உறுதிப்படுத்துவதில் தி.யூ.டி.எம் வீரர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் அளப்பரியது என பிரதமர் புகழாரம் சூட்டினார்.

மேலும், நாட்டிற்காக உயிர்நீத்த தி.யூ.டி.எம் வீரர்களுக்கும் அவர் மரியாதை செலுத்தி, "அவர்களின் தியாகம் என்றும் மறக்கப்படாது; அவர்களின் ஆன்மாக்கள் இறையருளால் ஆசீர்வதிக்கப்படட்டும்" எனத் தெரிவித்தார்.

இறுதியாக, "68வது ஆண்டு விழாவை கொண்டாடும் தி.யூ.டி.எம், இனியும் நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பைச் சிறப்பாக சுமந்து, மேன்மைமிகு, வலிமைமிக்க, நம்பிக்கைக்குரிய படையாகத் தொடர வேண்டும்" என பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset